கரீஃப் – ராபி மற்றும் ரபி ஸ்பெஷல் சீசன்
Step 1: முதலில் உங்கள் டிஜிட்டல் சேவா போர்டலில் தேடல் பெட்டி இல் Pradhan Mantri Fasal Bima Yojana என்று டைப் செய்யுங்கள்

Step2 : தேடலில் வரும் முடிவுகளில் Pradhan Mantri Fasal Bima Yojana in Insurance ஐ தேர்வு செய்யுங்கள்
Step3 : தேர்வு செய்த பின்னர் அது உங்களுக்கு இன்னொரு பக்கத்திற்கு அழைத்து செல்லும் அதில் நீங்கள் CSC Connect ஐ கிளிக் செய்து லாகின் செய்யுங்கள்

கடன் பெறுவோர் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் இருவருக்குமே இது பொருந்தும்

Step4 :மாநிலத்தை தேர்வு செய்யவும் – “தமிழ்நாடு” “Tamilnadu”
ராபி 2022ஐத் தேர்ந்தெடுத்து சமர்ப்பி (Submit) என்பதைக் கிளிக் செய்யவும்
Step5:
விண்ணப்பப் பக்கத்தில் உள்ள விருப்பங்கள்
விண்ணப்பப் படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும் கடன் பெறுபவர் அல்லது கடன் பெறாதவர்

Step6:
விவசாயியின் வங்கி விவரங்களை உள்ளிடுதல்

VLE ஆகிய நீங்கள் சரியான விவசாயின் வங்கி கணக்கு எண் உள்ளிடுதல் வேண்டும் மேலும் க்ளைம் செய்யும் தொகை விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஆகவே விவசாயின் வங்கி கணக்கு எண் உள்ளிடுதல் வேண்டும்
கவனத்தில் கொள்ளவேண்டியவை கிழே குறிப்பிட்டுள்ளது
உழவர் வங்கி பாஸ்புக் விவரங்கள் ஒன்றிற்கு நான்கு முறை சரி வர பாருங்கள் மற்றும் வங்கி பாஸ்புக் இல் இருக்கும் பெயர் விவசாயி பெயரா என சரி வர பாருங்கள் அனைத்து விபரங்களும் சரியாக இருந்தால் மட்டும் பதிவு செய்ய ஆரம்பியுங்கள்
கோப்பு அளவு(File Size): 2 MB க்கும் குறைவாக இருக்க வேண்டும்
வடிவம்: png/pdf/JPEG/JPG
உழவர் பெயரை ஆதாரில் இருப்பது போல் உள்ளிடவும்
ஆதார்.
ஆதார் சமீபத்தியதாக இருக்க வேண்டும்
உழவரின் சரியாக மொபைல் எண்ணை உள்ளிடவும்
சர்வே எண்ணை தனி தனியாக உள்ளிடவும்
இந்த பகுதி Kh-19 இல் புதுப்பிக்கப்பட்டது
சரியான காஸ்ராவை நிரப்பவும்
எண்./ சர்வே எண்.
பயிர்கள், விதைப்பு தேதி, சர்வே எண். மற்றும் கேட்கப்படும் விபரங்களுக்கு பதில் அளியுங்கள்

நில பதிவு மற்றும் விதைத்தல் சான்றிதழ். பதிவேற்றம் செயுங்கள்

அனைத்து விபரகளும் சரி பார்த்த பின்னர் காப்பிட்டு தொகையை செலுத்தி பணம் கட்டியதிற்கான ரசீதை விவசாயிடம் ஒப்படையுங்கள்